கொக்குவிலில் முச்சக்கரவண்டி – கார் நேருக்கு நேர் மோதி விபத்து!

Friday, August 4th, 2017

கொக்குவில் பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்றும் கார் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் குறித்த இரு வாகனங்களும் சேதமடைந்துள்ளன.

குறித்த சம்பவம் இன்று  முற்பகல் கொக்குவில் மஞ்சவனப்பகுதியில் நடைபெற்றுள்ளது.

இதனால் குறித்த வீதியின் போக்குவரத்து சிறிது நேரம் பாதிப்புக்குள்ளாகியிருந்தது. அத்துடன் குறித்த விபத்தில் வாகனங்களில் பயணித்த எவருக்கும் பாதிப்புக்கள் ஏற்படவில்லை எனவும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

Related posts: