கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் செப்டம்பர் மாதம் 5 ஆம் திகதிமுதல் முன்னெடுக்க முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் உத்தரவு!

Thursday, August 31st, 2023

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 5ம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.

முல்லைத்தீவு கொக்குதொடுவாய் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி விவகாரம் தொடர்பாக வழக்கின் விசாரணைகள் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் இடம்பெற்று வந்தது.

இந்தநிலையில், அதன் விசேட வழக்கு இன்றையதினம் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் அழைக்கப்பட்டிருந்தது.

நீதவான் தர்மலிங்கம் பிரதீபன் தலைமையில் இடம்பெற்ற குறித்த வழக்கு விசாரணையில் சம்மந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் முன்னிலையாகியிருந்தனர்.

இதன்போது, சம்மந்தப்பட்ட சகல தரப்பினரின் ஒத்துழைப்புக்களுடன் எதிர்வரும், 5 ஆம் திகதி முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைக்குழியின் அகழ்வுப்பணிகளை முன்னெடுப்பதற்கு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: