கொக்குத்தொடுவாய் கடற்பகுதியில் 19 மீனவர்கள் கைது!

Wednesday, August 3rd, 2016

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் கடற்பகுதியில் சட்டவிரோத வலைகளை பயன்படுத்தி மீன் பிடியில் ஈடுபட்டிருந்த 19 மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட நபர்களிடமிருந்து பைபர் கண்ணாடிகள் நான்கு, மூன்று தங்கூசி வலைகள் கைப்பறப்பட்டுள்ளன. கைது செய்யப்படட மீனவர்கள் முல்லைத்தீவு கடற்றொழில் அதிகாரியிடம் மேலதிக விசாரணைக்காக கடற்படையினரால் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Related posts: