கை அகற்றப்பட்ட சம்பவம்: விசேட விசாரணை – சுகாதார அமைச்சர்!

Thursday, August 8th, 2019

கர்ப்பப்பையை அகற்றுவதற்காக பெண் ஒருவரின் கையொன்றை அகற்றியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்துவதற்கு சுகாதார மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன சுகாதார அமைச்சின் விசாரணைப் பிரிவுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மாறவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவரின் கையொன்றை அகற்றியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே அமைச்சர் இவ்வாறு உத்தரவுவிடுத்துள்ளார்

மாரவில வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் நிர்மலா லோகநாதன் இதுதொடர்பாக தெரிவிக்கையில் அவர் வேறு நோய் காரணமாக ஆபத்தான நிலைக்கு உள்ளானதையிட்டு அதனை அடுத்து, அவர் விசேட சிகிச்சைப் பிரிவுக்கு அனுமதிக்கப்பட்டதாக விசேட சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிறிது நேரத்தின் பின்னர் குறித்த பெண்ணின் ஒரு கை பலவீனமடைந்ததை வைத்தியர்கள் அடையாளம் கண்டுள்ளனர். அத்துடன் கையின் நிறம் மாறி வருவதை வைத்தியர்கள் அடையாளங்கண்டுள்ளதாக தெரிவித்தார்;.

இதனை அடுத்து கடந்த மாதம் 24 ஆம் திகதி பாதிக்கப்பட்ட கை சத்திரசிகிச்சை மூலம் அகற்றப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். குறித்த நோயாளியின் உயிரை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் மேலும் கூறினார்.

Related posts: