கைவிடப்பட்ட ரயில் பெட்டிகளை அகற்றும் பணிகள் ஆரம்பம்!
Wednesday, January 4th, 2017யாழ்ப்பாணம் காங்கேசன்துறைப் பகுதியில் 1990ஆம் ஆண்டில் தரித்து நின்று பின்னர் கைவிடப்பட்ட ரயில் பெட்டிகளை அகற்றும் பணிகள் நேநற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கு இறுதியாக 1990ஆம் ஆண்டு கொழும்பில் இருந்து வந்த நிலையில் நிறுத்தி வைக்கப்;பட்டிருந்த ஒரு தொகை ரயில் பெட்டிகள் இவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கேசன்துறை ரயில் நிலையத்தில் 26 வருடங்களாகக் குறித்த ரில் இயந்திரம் மற்றும் பெட்டிகள் கைவிடப்பட்டிருந்தன. அந்தப் பகுதியில் தற்போது மீள்குடியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட் வருகின்றன. இவ்வாறு விடுவிக்கப்பட்ட பகுதியில் உள்ள சில குறுக்கு வீதிகளின் பாதையின் போக்குவரத்து இந்த ரயில் பெட்டிகள் பெரும் இடையூராகக் காணப்படுகின்றன. இவற்றினை அகற்றுமாறு கோரிக்கை விடப்பட்டிருந்தன.
பழைய ரயில் பெட்டிகள் அகற்றும் பணிகள் ரயில்வே திணைக்களத்தால் நேற்று ஆரம்பிக்கப்பட்டன. அதற்காக நீராவியியல் இயங்கும் மிகப் பெரும் பாரம்தூக்கி யாழ்ப்பாணத்துக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம் குப்பை அகற்றும் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
|
|