கையெழுத்திட கோரினால் பதவி விலகுவேன்! – வைத்திய சங்கத்தின் தலைவர்!

Monday, July 4th, 2016

சர்ச்சைக்குரிய மாலபே தனியார் வைத்திய கல்லூரியின் வைத்திய பீட மாணவர்களுக்கு இலங்கை வைத்திய சபையினால் பதிவு செய்வதற்கு நீதிமன்றம் உத்தரவு இட்டால் நீதிக்கு அடிபணிந்து தான் இராஜினாமா செய்யப்போவதாக வைத்திய சங்கத்தின் தலைவர் பேராசிரியர் காலோ பொன்சேகா தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த சூழ்நிலையில் தனது மனதுக்கு விருப்பமில்லாமல் நாட்டின் அனைவரது சாபத்துக்கும் இலக்காகியுள்ள குறித்த பிரச்சினையில் குறித்த தனியார் பல்கலைக்கழக மாணவர்களை பதிவு செய்யாமல் தான் பதவி விலகுவதே சிறந்தது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் எந்தவொரு தராதரமும் இல்லாத நிறுவனம் மூலம் உருவாக்கபடும் வைத்தியர்களும் தரமற்றவர்களாகவே இருப்பார்கள் என்றும் தெரிவித்துள்ள அவர், குறித்த வைத்தியர்களிடம் சிகிச்சைபெறப் போகும் நோயாளர்களின் தலையெழுத்து தொடர்பில் தமக்கு பொறுப்பு கூற முடியாதுள்ளதால் இந்த மாணவர்களை பதிவு செய்வதை விட தான் பதவி விலகுவது மேல் எனவும் பேராசிரியர் காலோ பொன்சேகா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: