கையூட்டல்  விவகாரம்: 62 பேருக்கு எதிராக தீர்ப்பு !

Monday, December 10th, 2018

மோசடி மற்றும் கையூட்டல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்ட 62 பேருக்கு எதிராக இந்த வருடத்தில் நீதிமன்ற தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டுவரையான காலப்பகுதியில் ஊழல் மோசடிகளுக்கு எதிரான வழக்குகளுக்கு வருடாந்தம் 15 இற்கும் 20இற்கும் இடைப்பட்ட தீர்ப்புகளே வழங்கப்பட்டுள்ளது. கடந்த வருடத்தில் 57 ஊழல் மோசடி குற்றவாளிகளுக்கு எதிராக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் கையூட்டல் பெறுகின்ற போது 48 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி செயலணி பிரதானி, இறக்குமதி ஏற்றுமதி கண்காணிப்பாளர், அரச மரக்கூட்டுத்தாபனத்தின் தலைவர், கால்நடை அபிவிருத்தி சபையின் தலைவர் உள்ளிட்ட உயர் பதவிகளை வகித்தவர்களும் இந்த பட்டியலில் உள்ளடங்குவதாக கையூட்டல் விசாரணை ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

இதுவரை காலமும் ஊழல் மோசடிகள் தொடர்பான வழக்குகள் நீதவான் நீதிமன்றங்களுக்கு மட்டுப்பட்டிருந்த நிலையில், எதிர்காலத்தில் அத்தகைய வழக்குகள் மேல் நீதிமன்றங்களிலும் விசாரிக்ககூடிய வகையில் சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன், தனியார் துறையில் கையூட்டல்,பாலியல் கையூட்டல், விளையாட்டுத்துறையில் இடம்பெறுகின்ற மோசடிகள் மற்றும் வெளிநாட்டு அரச பணியாளர்களால் மேற்கொள்ளப்படும் மோசடிகள் உள்ளிட்டவை குறித்து விசாரிப்பதற்கு சட்டத்திருத்தங்களை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related posts: