கையூடு கொடுத்து எமது கட்சிக்கு சேறுபூசும் சரவணபவன் தமிழ் மக்களின் பணத்தை சூறையாடியதை மறந்துவிட்டாரா – ஈ.பி.டி.பியின் வேட்பாளர் றெமீடியஸ்!

Thursday, July 30th, 2020

நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வெற்றியைப் பொறுக்கமுடியாத தமிழ் தேசியக்கூட்டமைப்பினர் ஈழ மக்கள் ஐனநாயகக்கட்சி மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வழமைபோன்று வெளிப்படுத்தி வருகின்றனர்

யாழ் ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற பத்திரிரைகயாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

எதிர்வரும் ஓகஸ்ட் 5 ஆம் திகதி நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தமிழ் மக்களின் அமோக ஆதரவைப் பெற்று வெற்றி பெறும் நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து வெளியேற்றப்படவுள்ளவம் தமிழ் மக்களை காட்டிக்கொடுக்கும் பத்திரிகையான உதயன் பத்திரிகையின் முதலாளியுமான சரவணபவன் ஈழ மக்கள் ஐனநாயகக் கட்சியை தொடர்புபடுத்தி விசமப் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறார்.

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட ஒருவரை கையூடு கொடுத்து  எமது கட்சி மீது சேறு பூசும் செயற்பாட்டில் ஈடுபட்டு வரும் சரவணபவன் தமிழ் மக்களின் பணத்தை சூறையாடிப் பத்திரிகை ஆரம்பித்ததை மக்கள் மறக்க மாட்டார்கள். இதனால் தற்கொலை செய்தவர்கள் ஏராளம். அதையும் எவரும் மறந்திருக்கமாட்டார்கள்.

ஆகவே வழமைபோன்று தேர்தல் காலங்களில் எமது கட்சி மீது சேறு பூசும் நடவடிக்கையை தற்போது அந்த பத்திரிகை முன்னெடுத்துள்ளது. இப்பத்திரலிகையின் பொய்களை மக்கள் நன்கு அறிந்தள்ளனர். அந்தவகையில் தமிழ் மக்களுக்கும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிக்கும் இடையிலான தொடர்பினை மக்கள் வரவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் நிரூபித்துக் காட்டுவார்கள் என்பதில் எவ்வித சந்தேகமில்லை என்றும் அவர் மேலம் தெரிவித்தார்.

Related posts: