கையிருப்பிலுள்ள அரிசி தொகை செப்டம்பர் மாதம் வரையே போதுமானது – விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!

Tuesday, May 31st, 2022

நாட்டில் தற்போது கையிருப்பிலுள்ள அரிசி தொகை, எதிர்வரும் செப்டம்பர் மாதம் வரை மாத்திரமே போதுமானது என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அதற்கு பின்னரான காலப்பகுதிக்கான பாவனைக்காக 7 இலட்சம் மெட்ரிக் தொன்னுக்கும் அதிக  அரிசி தொகை இறக்குமதி செய்யப்பட வேண்டும் என அமைச்சர் கூறியுள்ளார்.

இதனிடையே

தற்போது நிலவும் நெருக்கடியான சூழலில் சுமார் 2,000 பேக்கரிகள் மூடப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன் காரணமாக சுமார் ஒரு இலட்சம் பேர் வேலைவாய்ப்பினை இழந்துள்ளதாக சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

எரிவாயு மற்றும் டீசலுக்கு நிலவும் தட்டுப்பாடே இதற்கான காரணமென அவர் சுட்டிக்காட்டியுள்ளளமை குறிப்பிடத்தக்கது..

000

Related posts: