கையளிக்கப்பட்டது காணாமற்போனோர் தொடர்பான விசாரணை அறிக்கை!

Sunday, August 14th, 2016

நாட்டின் யுத்தகாலத்தில் காணாமற்போனோர் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்வதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை ஜனாதிபதி செயலாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

கடந்த காலத்தில் முன்னெடுக்கப்பட்ட சாட்சி விசாரணை அமர்வுகளில் தங்களால் பதிவு செய்யப்பட்ட முறைப்பாடுகள் மற்றும் சாட்சியங்கள் தொடர்பான தகவல்கள் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம குறிப்பிட்டுள்ளார்.

இரண்டரை வருடங்கள் செயற்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ காலம் கடந்த ஜூலை மாதம் 15 ஆம் திகதி நிறைவடைந்தது. இந்தக் காலப்பகுதியில் வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் விஜயம் செய்த ஆணைக்குழுவின் அதிகாரிகள் சுமார் 6400 சாட்சியங்களை விசாரணை செய்திருந்தனர்.

பொது மக்களிடமிருந்து 19000 முறைப்பாடுகள் கிடைத்திருந்ததாக காணாமற்போனோர் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்வதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார். அவற்றில் 4800 முறைப்பாடுகள் போலியானவை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் பாதுகாப்பு பிரிவில் 5400 பேர் காணாமற்போயுள்ளமை தொடர்பிலும் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் காணாமற்போனோர் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்வதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.


ஊவ வெல்லஸ்ஸ புரட்சி வீரர்களை நாட்டுப்பற்றுள்ளவர்களாக பிரகடனப்படுத்தும் வைபவம் இன்று!
உழவு இயந்திரம் கிணற்றுக்குள் வீழ்ந்தது - கேப்பாபிலவில் சம்பவம்!
பொதுத் தேர்தலே தீர்வாக அமையும் -முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச!
மே 03 ஆம் திகதி வரை தனியார் வகுப்புகள் இடைநிறுத்தம்!
யாழ் வருகிறார் பிரதமர்!