கையடக்கத் தொலைபேசி எடுத்து செல்லத் தடை – மஹிந்த தேசப்பிரிய!

Saturday, January 27th, 2018

உள்ளூராட்சித் தேர்தல் வாக்களிப்பு நிலையங்களுக்குள் பிரவேசிக்கும் வாக்காளர்கள் கையடக்கத் தொலைபேசி எடுத்து செல்வது தடைசெய்யப்பட்டுள்ளது.. இவ் விடயத்தை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தபால் மூல வாக்குப் பதவின் போது வாக்குப் பதிவு அட்டையை கையடக்கத் தொலைபேசியில் போட்டோ பிரதி செய்து சமூகஊடகமொன்றில் பதிவேற்றம் செய்தமை தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். உள்ளூராட்சித்தேர்தல் நாளன்று பாதுகாப்புக்காக முப்படைகளினதும் உதவி பெற்றுக் கொள்ளப்படும் என்றும் அவர் முன்பு சுட்டிக்காட்டியிருந்தமைகுறிப்பிடத்தக்கது.

Related posts: