கைமாறியது விமானங்கள்!

Saturday, July 30th, 2016

பாக்கிஸ்தானின் தேசிய விமான நிறுவனம் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸிடம் இருந்து ஏ-330 ரகவிமானங்களை குத்தகை பெறும் வகையிலான உடன்படிக்கையில் நேற்று கைச்சாத்திட்டுள்ளது.

இதற்கான நிகழ்வு நேற்று கொழும்பில் இடம்பெற்றுள்ளது என செய்திகள் தெரிவிக்கின்றன.

குறித்த ஒப்பந்தத்திற்கமைய முதலாவது விமானம் அடுத்த வாரம் பாக்கிஸ்தானின் தேசிய விமான நிறுவனத்திடம் கையளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய 2 விமானங்கள் எதிர்வரும் மாதங்களில் கையளிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் நட்டத்தை ஈடுசெய்யும் நோக்கில் இந்த நடவடிக்கைமேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: