கைத்தொழில் துறையினருக்கு தேவையான மூலப்பொருட்களை விரைவில் இறக்குமதி செய்ய நடவடிக்கை – அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவிப்பு!

Sunday, February 20th, 2022

கைத்தொழில்துறையினருக்கு தேவையான மூலப்பொருட்களை விரைவில் இறக்குமதி செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தற்போது நிலவும் அந்நிய செலாவணி நெருக்கடி காரணமாக இலங்கைக்கான தொழில்துறை இறக்குமதிகளை மேற்கொள்வதில் குறிப்பிடத்தக்க சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அமைச்சர், இந்த விடயம் குறித்து அமைச்சரவை உறுப்பினர்களுடன் கலந்துரையாடியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அதனடிப்படையில் எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு தொழில்துறையினருக்குத் தேவையான மூலப்பொருட்கள் அடங்கிய அறிக்கையை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்ததாக அமைச்சர் குறிப்பிட்டார்.

மேலும், சீனா போன்ற மற்றுமொரு தேசத்துடன் கலந்துரையாடி, மூலப்பொருட்களை பெற்றுக்கொள்வதற்கு விசேட கடன் வரிசையை இலங்கை உருவாக்க முடியும் எனவும் அமைச்சர் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் சீனத் தூதுவருடன் கலந்துரையாடி உடன்பாடு எட்டப்படும் என நம்புவதாகவும், அதில் வெற்றிபெற்றால் மூலப்பொருள் நெருக்கடிக்கு விடை கிடைக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: