“கைத்தொலைபேசிகளை ஒப்படையுங்கள்” – சிறைச்சாலைக்குள் சுவரொட்டிகள்!

Saturday, July 28th, 2018

சிறைச்சாலைக்குள் இரகசியமான முறையில் கையடக்கத் தொலைபேசிகளை வைத்திருப்போர் அவற்றை உடனடியாக சிறைச்சாலை அதிகாரிகளிடம் ஒப்படைக்குமாறு கொழும்பு வெலிகடைச் சிறைச்சாலைக்குள் பல இடங்களில் தகவல்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன

கைதிகள் அதிகமாக நடமாடும் பகுதிகளில் இந்த அறிவித்தல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. சிறைக்குள் கையடக்கத் தொலைபேசி பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ள நிலையில் யாரேனும் அதனைப் பயன்படுத்தினால் அது தண்டனைக்குரிய குற்றமெனவும் இதனால் சிறைக்கூடங்களுக்குள் தேடுதல்களை நடத்த முன்னர் கையடக்கத் தொலைபேசிகளையும் அவற்றின் சிம் அட்டைகளையும் அதிகாரிகளிடம் ஒப்படைப்போர் மன்னிக்கப்படுவார்கள் எனவும் இல்லையேல் அவற்றை வைத்திருப்போருக்கு கடும் தண்டனைகள் வழங்கப்படுமெனவும் அந்த அறிவித்தல்களில் குறிப்பிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

நாட்டில் அண்மைக்காலமாக இடம்பெற்ற பாரியளவிலான போதைப்பொருள் குற்றச் செயல்களுடன் தற்போது சிறையிலுள்ள குற்றவாளிகள் சிலர் தொடர்புபட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்கள் உள்ளே இருந்து கொண்டு தொலைபேசிகள் மூலமாக வெளியே குற்றச்செயல்களை நடைமுறைப்படுத்துவதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இதனைத் தொடர்ந்து சிறைக்குள் கையடக்கத் தொலைபேசி பாவனையை கட்டுப்படுத்தும் வகையில் விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Related posts: