கைதிகளை   வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு 3 வைத்தியர்களின் பரிந்துரை அவசியம்!

Monday, September 11th, 2017

கைதி ஒருவரை சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட வேண்டுமாயின் மூன்று வைத்தியர்களின் பரிந்துரை பெற்றுக் கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதுவரைகாலம் வைத்தியரொருவரின் பரிந்துரைக்கு அமைய கைதிகள் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டீ.எம் சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

எனினும் மூன்று வைத்தியர்களின் பரிந்துரைகளை பெற்றுக் கொண்டதன் பின்னர் இனிவரும் காலங்களில் கைதிகளை வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.

வைத்தியர்களின் பரிந்துரைகள் அனைத்தும் அமைச்சிற்கும் சமர்ப்பிக்ப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அந்த வைத்திய பரிந்துரைகள் தொடர்பில் அமைச்சு மட்ட விசாரணைகள் முன்னெடுக்கப்படும் எனவும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலை வைத்தியசாலையில் கைதிகளை அனுமதிக்கும் போது பல்வேறு முறைகேடுகள் இடம்பெறுவதாக கிடைத்துள்ள முறைப்பாடுகளின் அடிப்படையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர்.டீ.எம் சுவாமிநாதன் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts: