கைதிகளுடன் பயணித்த சிறைச்சாலை பேருந்து விபத்து!

Friday, December 7th, 2018

மாத்தறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த சிறைச்சாலை பேருந்து ஒன்று காலி சமுத்ர மாவத்தை கடற்படை முகாமிற்கு அருகில் பாதையை விட்டு விலகி அருகில் இருந்த மின் கம்பத்துடன் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

மாத்தறை சிறைச்சாலையில் இருந்து 5 பெண் கைதிகளை கொழும்புக்கு நீதிமன்ற நடவடிக்கைக்கு அழைத்து வந்த பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

பேருந்தின் சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை மயக்கமே விபத்துக்கு காரணம் என ஆரம்ப விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து விபத்துக்குள்ளான பேருந்தில் இருந்த கைதிகள் காலி சிறைச்சாலைக்கு சொந்தமான பஸ் மூலம் கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts: