கைதடி முதியோர் முதியவர்கள் முதற்தடவையாக ஆன்மிகச் சுற்றுலா!

Tuesday, July 10th, 2018

கைதடி அரச முதியோர் இல்லத்தில் தங்கியிருக்கும் நடக்க முடியாத இயலாத 17 முதியவர்கள் முதல் தடவையாக ஆன்மீகச் சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தாதியப் பயிற்சி மாணவர்கள் கடந்தவாரம் முதியோர் இல்லத்துக்குச் சென்றனர். அங்கு முதியோர்களுடன் கலந்துரையாடினர். அவர்களின் தேவைகள் குறித்துக் கேட்டறிந்தனர். அத்துடன் கடந்த வெள்ளிக்கிழமை அவர்களில் 17 பேரை ஆலய வழிபாட்டுக்காக ஒருநாள் பயணமாக மன்னாருக்கு அழைத்துச் சென்றனர். மன்னாரில் திருக்கேதீஸ்வரம் மற்றும் மடு தேவாலயத்தை தரிசித்தனர்.

Related posts: