கைதடியில் இனந்தெரியாதோர் தாக்குதல்: குழந்தை உட்பட நால்வர் காயம்!

கைதடி, நாவற்குழி வீதியில் அமைந்துள்ள வீடொன்றுக்குள் ஞாயிற்றுக்கிழமை (05) இரவு அத்துமீறி நுழைந்துள்ள இனந்தெரியாதோர் சிலர், அந்த வீட்டிலிருந்த ஒன்றரை வயதுக் குழந்தை உட்பட நால்வர் மீது தாக்குதல் மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இதில், கேதீஸ்வரன் சுகந்தன் (வயது 25) அவரது மனைவி சுகந்தன் நமீரா (வயது 26), இவர்களது குழந்தை சுகந்தன் கிருத்திகன் (1 ½ வயது) மற்றும் சுகந்தனின் சகோதரியான இராஜதீபன் யாழினி (வயது 29) ஆகியோர் காயமடைந்த நிலையில், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
டிப்பர் வாகனத்தில் வந்த நால்வரடங்கிய குழுவினரே, மேற்படி வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து, இந்தத் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை, சாவகச்சேரிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
Related posts:
மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தை இலாபகரமானதாக்க நடவடிக்கை - மீன்பிடித்துறை அமைச்சு!
உண்யைான துரோகிகள் யார் என்பதை கடந்த ஐந்து வருடங்களில் தமிழ் மக்கள் இனங்கண்டுவிட்டனர் - வைத்திய கலாநி...
கடந்த 10 நாட்களில் இலங்கையில் 20,000 கொரோனா நோயாளிகள் அடையாளம்!
|
|