கைகளால் தொட்டு உணவுப் பொருட்களை விற்கத் தடை!

Thursday, January 17th, 2019

உணவுப் பொருட்களை கையுறை அணியாமல் நேரடியாக கைகளால் தொட்டு விற்பனை செய்வது தடைசெய்யப்படவுள்ளதாக சுகாதார அமைச்சின் உணவு கட்டுபாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதியிலிருந்து குறித்த தடை அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் எதிர்வரும் 3 மாத கால பகுதிகளுக்குள் பொதுமக்கள், பாடசாலை மாணவர்களை தெளிவுபடுத்துமாறு மாகாண மற்றும் மாவட்ட, பிரதேச சுகாதார அதிகாரிகளுக்கு துண்டுபிரசுரம் விநியோகிக்கவுள்ளதாகவும் சுகாதார அமைச்சின் உணவு கட்டுபாட்டு பிரிவின் உதவி பணிப்பாளர் ஜே.கே. ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

Related posts: