கேப்பாப்பிலவு தனிமைப்படுத்தல் முகாமில் இருந்து இருவர் தப்பி ஓட்டம்: அச்சத்தில் மக்கள்!

Friday, April 24th, 2020

முல்லைத்தீவு கேப்பாப்பிலவு தனிமைப்படுத்தல் முகாமில் இருந்து இருவர் தப்பி ஓடியுள்ளதாக கூறப்படுகின்றது. இந்தச் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கொரோனா தொற்று இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கொழும்பிலிருந்து அழைத்துவரப்பட்ட ஒரு தொகுதியினர் கேப்பாப்பிலவு தனிமைப்படுத்தும் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் அவர்களில் இருவரே தப்பி ஓடியுள்ளதாக தெரிவிக்கபடுகின்ற நிலையில், பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து அவர்களைத் தேடி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: