கேந்திர மையமாக மாற்றப்படவுள்ள இலங்கை !

Tuesday, July 19th, 2016

இந்தியாவுடன் செய்துகொள்ளப்படவிருக்கும் எட்கா உடன்படிக்கை இந்த வருட இறுதியில் கையெழுத்திடப்படும் எனவும், அடுத்த வருட இறுதியில் சிங்கப்பூருடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை ஒன்று கைச்சாத்திடப்படவிருப்பதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூர் ரெஃபல் மாநாட்டு மண்டபத்தில் நேற்று நடைபெற்ற தெற்காசியாவில் இருந்து புலம்பெயர்ந்தவர்களின் மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்து சிறப்புரையாற்றும் போதே பிரதமர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை சீனாவுடன் மாத்திரம் செயற்படாது, இலங்கையில் முதலீடு செய்ய அனைத்து நாடுகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளோம். உலகில் வேகமாக அபிவிருத்தியடைந்து வரும் 50 நகரங்களில் கொழும்பு 20ஆவது இடத்தில் உள்ளது.

வரி கொள்கைகளை தளர்த்தி, இலங்கையில் முதலீடு செய்ய வர்த்தகர்களுக்கு சிறந்த சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. மனித வள அபிவிருத்தி புள்ளியில் இலங்கை தெற்காசிய நாடுகளில் சிறந்த நாடாக விளங்குகிறது. சிங்கப்பூர் மற்றும் டுபாய் நாடுகளுக்கு மத்தியில் காணப்படும் கேந்திர நிலையமாக இலங்கை அபிவிருத்தி செய்யப்படும் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.


மின்தடைக்கு நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலைய குறைபாடே காரணம்!
விரிவான பொருளாதார வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பிக்கும் வருடமாக அடுத்த ஆண்டு பிரகடனம் - நிதியமைச்சர் ரவி!
குப்பை அகற்றுவதற்கு உதவுகிறது தென் கொரியா!
அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா இனிதே நிறைவு!
வரும் 16 ஆம் திகதி 800 பேருக்கு இரட்டைப் பிரஜா உரிமை!