கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இலங்கையை சுரண்டுவோ, சட்டவிரோத நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தவோ எவருக்கும் அனுமதியளிக்கப்படாது – பாதுகாப்பு செயலாளர் தெரிவிப்பு!

Saturday, September 25th, 2021

கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இலங்கையை சுரண்டுவோ, சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடவோ, இலங்கை நிலப்பரப்பை ஒரு தளமாக பயன்படுத்த அனுமதிக்கமாட்டோம் என்றும் பாதுகாப்புச் செயலாளர்  கமல் குணரத்னவை உறுதியளித்துள்ளார்.

இலங்கைக்கான அவுஸ்திரேலியா பதில் உயர்ஸ்தானிகர் அமன்டா ஜுவேல் பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்னவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதன்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் பாரம்பரியமற்ற பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் மற்றும் தீவிரவாதத்தை ஒழிப்பதற்கான கூட்டு முயற்சிகளின் முக்கியத்துவம் என்பன தொடர்பாகவும் இந்த கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது. மேலும் இந்த விடயங்கள் தொடர்பில் அனைத்து பிராந்திய நாடுகளுக்கும் இலங்கை முழுமையாக ஒத்துழைக்கும் என பாதுகாப்புச் செயலாளர் உறுதியளித்துயள்ளார்.

போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பை முடக்குவதற்கு நாட்டின் கடற்படை மற்றும் ஏனைய சட்ட அமுலாக்க பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட அனைத்து விதமான நடவடிக்கைகளையும் அவுஸ்திரேலியா பதில் உயர்ஸ்தானிகர் இந்த சந்திப்பில் பாராட்டியுள்ளார்.

சட்டவிரோத ஆட்கடத்தல் முறியடிக்க கடற்படையினர் மேற்கொண்ட முயற்சிகள் அவுஸ்திரேலியா தூதுக்குழுவினால் பார்க்கப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ள அதேநேரம் இரு நாடுகளிடையே நிலவும் பாதுகாப்பு உறவை மேலும் வலுப்படுத்துவதற்காக இரு தரப்பினரும் இந்த சந்திப்பின்போது உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இந்த சந்திப்பின்போது பிராந்திய பாதுகாப்பின் ஸ்திரத்தன்மையை பேண, நாடுகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கன வழிகள் உட்பட இருதரப்பும் முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டதாகவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: