கேகாலை நீதவான் உத்தரவு – அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்தினர் ரம்புக்கனையில் ஆய்வு!

Friday, April 22nd, 2022

ரம்புக்கனை சம்பவம் தொடர்பில், அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்கள அதிகாரிகள் குழு ஒன்று, மோதல் இடம்பெற்ற பகுதிக்கு சென்று பகுப்பாய்வுகளை மேற்கொண்டுள்ளது.

கேகாலை நீதவான் வாசனா நவரத்ன நேற்று பிறப்பித்த உத்தரவுக்கு அமைய, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சம்பவம் இடம்பெற்று இரண்டு நாட்கள் கடந்துள்ள நிலையில், இரசாயன பகுப்பாய்வு அறிக்கையைப் பெற்றுக்கொள்ள பொலிசார் நடவடிக்கை எடுக்கவில்லை என சட்டத்தரணிகள், நேற்று நீதிமன்றில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதற்கமையவே, நீதிவான் குறித்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

இதேவேளை, ரம்புக்கனை சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக,  பொலிஸ் மா அதிபர் சி.டீ. விக்ரமரத்ன உட்பட சில சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளை, இன்றையதினம் முன்னிலையாகுமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது.

பொலிஸ் மா அதிபருக்கு மேலதிகமாக, கேகாலை வலயத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிக் பொலிஸ் மா அதிபர், பிரதிக் பொலிஸ் மா அதிபர், ரம்புக்கனை மற்றும் கேகாலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் ஆகியோரும் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, ரம்புக்கனை சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு 3 நாட்களில் இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸ் மா அதிபர் சீ.டி விக்ரமரத்ன, குற்றப்புலனாய்வு திணைக்கள பணிப்பாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் டபிள்யூ. திலகரத்னவிற்கு நேற்று உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

00

Related posts: