கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் பலி – மீசாலையில் சம்பவம்!

Friday, December 25th, 2020

யாழ்ப்பாணம் – மீசாலை வடக்கு பகுதியில் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

47 வயதுடைய 2 பிள்ளைகளின் தந்தையான ஐயாத்துரை மோகனதாஸ் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிலில் வருகை தந்தவர்கள் குறித்த நபரை கூரிய ஆயுதத்தால் தாக்கிவிட்டு தப்பி சென்றுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த நபரின் சடலம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

இளம் தொழில் முயற்சியாளர்களுக்கு காணிகளை பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை விரைவில் - காணி அமைச்சின் செயலாளர...
நாட்டிலுள்ள பாடசாலை கட்டமைப்பில் 78 வீதமான மாணவர்களுக்கு ஒரு வேளை உணவு வழங்கப்படுகின்றது - கல்வி அம...
சுமார் 5000 அதிபர்களுக்கான நியமனக் கடிதங்கள் அடுத்த மாதம் கையளிக்கப்படும் - கல்வி இராஜாங்க அமைச்சர் ...