கூட்டு என்ற பெயரில் தமிழ் தரப்பில் சிறந்த நாடகம் மீண்டும் அரங்கேற்றப்படுகிறது – முன்னாள் முதல்வர்.

Saturday, October 19th, 2019

தேசிய நல்லிணக்கத்தின் எடுத்துக்காட்டாக இருந்து தென்னிலங்கையுடன் தமிழ் மக்களுக்கான உறவை பலப்படுத்தி பலவகையான சேவைகளை செய்துகாட்டியவர் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா. அந்த நல்லிணக்க வல்லமை கொண்ட தலைவரது வழிநடத்தலில் எமது மக்கள் அணிதிரண்டு வருவார்களேயானால் அடுத்த ஆட்சிக்காலத்தில் வவுனியா மாவட்ட மக்களின் வாழ்வில் நிரந்தர ஒளி வீசுவதற்கான வழிவகைகள் கிட்டும் என யாழ் மாநகர முன்னாள் முதல்வர் யோகேஷ்வரி பற்குணராஜா தெரிவித்துள்ளார்.

வவுனியா தாலிக்குளம் பகுதியில் அப்பகுதி மக்களின் அழைப்பின் பெயரில் நடைபெற்ற மக்களுடனான சந்திப்பில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கலந்துகொண்டு மக்களது பிரச்சினைகள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டர்

இதன்போது குறித்த மக்கள் மத்தியில் உரையாற்றிய முன்னாள் முதல்வர் யோகேஷ்வரி பற்குணராஜா மேலும் கூறுகையில் –

டக்ளஸ் தேவானந்தா என்ற மக்கள் சேவகனின் கரங்கள் பலப்படும்போதுதான் தமிழ் மக்களின் எதிர்காலமும் வளம்பெறும்.
கடந்த காலங்களில் யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்த போது அவலப்பட்ட மக்களுக்கு அவர் செய்த சேவைகளும் உதவிகளும் ஏராளம்.
ஆனால் தவறான தமிழ் தலைமைகளின் வழிநடத்தல்களாலும் அபாண்டமான சேறுபூசல்களாலும் எமது சேவைக்கான மக்களின் ஆணைகள் தடுக்கப்பட்டன.

மக்களை உசுப்பேற்றி வாக்குகளை அபகரித்து பதவிகளை அலங்கரித்தனர்.

ஆனால் மக்களின் நலன்களையோ அன்றி அவர்களது அபிலாசைகளையோ அவர்கள் சிறிதளவேனும் அக்கறைகொள்ளவில்லை.
இதன் விளைவாகவே இன்றுவரை எமது மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படாதிருக்கின்றன்.

ஆனால் எமது தலைவர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் எமது மக்களின் அனைத்து பிரச்சினைகளும் தீர்க்கப்பட்ட வேண்டும் என்பதற்காகவே அயராது உழைத்துவருகின்றார்.

இன்று தமிழ் மக்களின் மத்தியில் வாக்கு அபகரிப்பதற்காக தேர்தல் கால நாடகம் ஒன்று அரங்கேற்றப்பட்டு வருகின்றது. அதற்கு தமிஅக்களின் ஐக்கியம் என்று பெயர்வைத்து தமது கடந்தகால் தவறுகளை கழுவ முற்படுகின்றனர்.

ஆனால் தமி மக்கள் இவர்களது பொய்களையும் ஏமாற்றுக்களையும் நன்கு அறிந்துகொண்டுள்ளனர்.
வரவுள்ள ஜனாதிபதி தேர்தலில் நாம் ஆதரிக்கும் பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோட்டபயவின் வெற்றிக்கு உங்கள் ஒவ்வொருவரது ஆதரவும் கிடைக்கவேண்டும் என்பதே எமது கோரிக்கையாக உள்ளது.
உங்கள் அபிலாசைைக்ளுக்கு தீர்வு பெற்றுத்தர எம்மால் முடியும்.எம்மை நம்புங்கள். நாம் செய்வோம். செய்விப்போம் என்றார்.

Related posts:

தடுப்பூசியைப் பெற்றுக்கொண்ட இலங்கையர்களுக்கு கட்டார் மற்றும் சவுதி அரேபியா விடுத்துள்ள அறிவிப்பு!
கடன் தவணை செலுத்துவதற்கு பணக் கையிருப்பு உள்ளது - மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவ...
'ஒரே நாடு - ஒரே சட்டம்' செயலணி மூன்று முக்கிய அமைச்சர்களுடன் சந்திப்பு – பல்வேறு விடயங்கள் தொடர்பில்...