கூட்டுறவு கிராமிய வங்கிகள் ஊடாக விசேட கடன்திட்டம் அறிமுகம் – விரைவில் அமுலாக்கப்படும்!

Tuesday, June 12th, 2018

கூட்டுறவுக் கிராமிய வங்கிகள் ஊடாக அங்கத்தவர்களுக்கான வாழ்வாதார கடன் வழங்கும் திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளன. இத் திட்டத்திற்கு மத்திய வங்கி அதற்காக சுழற்சி முறையிலான நிதி உதவியை வழங்க முன்வந்துள்ளது.

மக்களின் வாழ்வாதாரம் மற்றும் சுயதொழில் போன்றவற்றை ஊக்குவிக்கும் பொருட்டு அங்கத்தவர்களுக்கு இந்த திட்டத்தின் ஊடாக கடன் வழங்கப்படவுள்ளது. வடக்கில் உள்ள கிராமிய வங்கிகள் ஊடாக அங்கத்தவர்கள் இந்த கடன் திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியும்.

குறிப்பாக போரினால் பாதிக்கப்பட்ட பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு இத் திட்டம் ஊடாக கடன்தொகையை அதிகரித்து வழங்கவும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கூட்டுறவுக் கிராமிய வங்கி, சிக்கன கடன் வழங்கும் கூட்டுறவுச் சங்கங்கள் ஊடாக அங்கத்தவர்களுக்கு இக் கடன்கள் வழங்கப்படும். இந்த கடன்தொகைக்கு விண்ணப்பிப்போர் கூட்டுறவுச் சங்கங்களில் ஓர் அங்கத்தவராக இருக்க வேண்டும். இக் கடன்தொகைக்கு விண்ணப்பிப்பதற்கு முன்பாக சிலர் சங்கங்களின் அங்கத்தவர்களாக இணைவதற்கு விண்ணப்பித்தும் வருகின்றனர்.

Related posts: