கூட்டுறவு கிராமிய வங்கியூடான கடன் வழங்கல் விரைவுபடுத்தப்படும் – கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர்!
Sunday, February 4th, 2018
குறிப்பாக கூட்டுறவுச் சங்கங்களின் அங்கத்தவர்கள், பணியாளர்களுக்கான கடன் திட்டங்களுக்கு விண்ணப்பித்தால் அவை உடனடியாக பரிசீலிக்கப்பட்டு கடன் தொகைகள் வழங்கப்பட வேண்டும் என்று வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் பொ.வாகீசன் தெரிவித்தார்.
கூட்டுறவாளர்களால் ஆரம்பிக்கப்பட்ட கிராமிய வங்கிகளில் அவர்கள் அங்கத்தவர்களை இணைத்து வைப்பிலிடுகின்றனர். கடன்தொகைக்கு அவர்கள் விண்ணப்பிக்கும் பட்சத்தில் அவர்களுக்கான கடன்கள் பரிசீலிக்கப்பட்டு உரிய நேரத்தில் வழங்கப்பட வேண்டும்.
கூட்டுறவு பணியாளர்கள் அவசர தேவைகள் கருதி இக் கடன் தொகைக்கு விண்ணப்பித்தால் அவ் விண்ணப்பத்தை சங்க நிர்வாகங்கள் உடனடியாக பரிசீலித்து அக்கடன்களை வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
Related posts:
தங்க விருதை வென்றது இலங்கை விமானப்படை!
ஜனாதிபதி தேர்தல் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு இந்த மாத இறுதியில் - தேர்தல்கள் ஆணைக்குழு!
வடக்கு உள்ளிட்ட நாட்டின் பல மாவட்டங்களில் மழையுடனான காலநிலை இன்று மாலையிலிருந்து சற்று அதிகரிக்கும்!
|
|