கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களத்துக்கு 173 மில்லியன் நிதி தேவை!

Monday, April 4th, 2016

2016ஆம் ஆண்டில் கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்தினூடாக 39 திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு 173.1 மில்லியன் ரூபாய் நதி தேவைப்படுவதாக, மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களத்தினூடாக,  2016ஆம் ஆண்டில் கரைச்சி பிரதேசத்தில் 14 திட்டங்கள், கண்டாவளைப் பிரதேசத்;தில் 05 திட்டங்கள், பூநகரி பிரதேசத்தில் 14 திட்டங்கள், பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் 06 திட்டங்கள் போன்ற 39 திட்டங்களை முன்னெடுப்பதற்கே இந்நிதி தேவைப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை 2015ஆம் ஆண்டில் கூட்டுறவு அலுவலக கட்டடநிர்மாணம், கடற்பாசி வளர்ப்பு, மீன்பிடித்துறை அபிவிருத்தி மற்றும் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைத்தல், ஐஸ் உற்பத்தி தொழிற்சாலை மற்றும் சந்தைப்படுத்தல் அபிவிருத்தி நடவடிக்கைகள் உள்ளிட்ட அபிவிருத்தி திட்டங்கள் 2015ஆம் ஆண்டில் 102.045 மில்லியன் ரூபாய் செலவில் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

எச்1என்1 நோய்தொற்றுக்கு யாழில் 42பேருக்குச் சிகிச்சை ஆயினும் 9பேருக்கு மட்டுமே பன்றிக்காய்ச்சல்!
அனைத்துக் குடும்பங்களுக்கும் பொருத்தமான வீடுகளைப் பெற்றுத் தரக்கூடிய சூழல் உருவாக்கித் தரப்படும் – ஜ...
உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் சகல பிரிவுகளுடனான கலந்துரையாடலும் நிறைவு - தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவி...