கூட்டுப்பயிற்சியில் கலந்துகொண்ட கப்பல்கள் நாடு திரும்பின!
Tuesday, September 19th, 2017
இந்து – லங்கா கடற்படை கூட்டுப்பயிற்சியில் கலந்து கொள்வதற்காக கடந்த 4ஆம் திகதி இந்தியா சென்ற இலங்கை கடற்படைக்குச் சொந்தமான SLNS சயுற மற்றும் SLNS சாகர ஆகிய இரண்டு கடற்படை கப்பல்களும் நாடுதிரும்பியுள்ளன.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகின்ற இக்கூட்டுப்பயிற்சியினை வெற்றிகரமாக நிறைவு செய்து நேற்று திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்த SLNS சயுற கப்பல் கடற்படை மரபுகளுக்கமைவாக மரியாதை செலுத்தி வரவேற்கப்பட்டது.
இதேவேளை SLNS சாகர தற்போது திருகோணமலை துறைமுகத்திற்கு வந்து சேரும் வழியில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
குறித்த நிகழ்விற்கு கிழக்கு பிராந்திய கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் நிமல் சரத்சேன, கடற்படையின் கொடிவரிசை கட்டளைத் தளபதியான ரியர் அட்மிரல் கபில சமரவீர உள்ளிட்ட சிரேஷ்ட பல கடற்படை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகின்ற ‘SLINEX 2017’ கூட்டுப்பயிற்சியானது கடந்த 07ம் திகதிமுதல் 14ம் திகதிவரை இந்தியாவில் இரு நாடுகளுக்கிடையில் இடம்பெற்றுள்ளது. இந்து – லங்கா கடற்படை கூட்டுப்பயிற்சியில் கடற்படை பணிகள், கப்பல் பயணம், தொடர்பாடல், கப்பல்களுக்கிடையில் நபர்கள் மற்றும் பொருட்களை பரிமாறிக்கொள்ளுதல் மற்றும் ஹெலிகொப்டர் பயிற்சி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல பயிற்சி விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|