கூட்டமைப்புக்குள் கொந்தளிப்பு : நல்லூர் பின் வீதியில் கொடும்பாவியாக்கப்பட்டார் சுமந்திரன்!
Wednesday, May 13th, 2020தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனுக்கு எதிராக அவரது உருவப் பொம்மையை நான் இனத்துரோகி என்ற பதாகையுடன் நல்லூர் பின் வீதியில் வைத்து மக்கள் தமது எதிர்ப்பலைகளை வெளிப்படுத்திய சம்பவமொன்று நடைபெற்றுள்ளது.
தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் தமிழ் மக்களது ஆயுதப் போராட்டம் தொடர்பிலும் சர்ச்சைக்குரிய கருத்தை தென்னிலங்கை ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சுமந்திரன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அவரது கருத்துக்கு தமிழ் மக்களிடையே பெரும் எதிர்ப்பலை எழுந்துடன் அவரது கட்சிக்கு உள்ளேயும் கட்சிக்கு வெளியேயும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எதிராக பெரும் எதிர்ப்பலையை உருவாக்கியிருந்தது.
சுமந்திரனின் குறித்த கருத்தை அடுத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தமிழரசுக் கட்சி தவிர்ந்த ஏனைய உறுப்பினர்களுக்கும் இவ்விடயம் பெரும் பிரச்சினைகளை உருவாக்கியும் இருந்தது.
இதையடுத்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் சுமந்திரனுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். அவரை கட்சியிலிருந்தும் கட்சியின் பேச்சாளர் பதவியிலிருந்தும் வெளியேற்ற வேண்டும் என்’றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனிடம் வலியுறுத்தியிருந்தனர்.
இதன் பின்னணியிலேயே நல்லூரில் செருப்பு மாலை அணிவிக்கப்பட்டு நான் தமிழினத் துரோகி என்ற சுலோகம் எழுதப்பட்ட பதாதை கழுத்தில்’ தொங்கவிடப்பட்டி நிலையில் சுமந்திரனின் உருவப் பொம்மையை மின்கம்பமொன்றில் கட்டிவைத்து மக்கள் தமது எதிர்ப்’பலைகளை வெளிப்படுத்தியிருந்தனர்.
இவ்வாறு கூட்டமைப்புக்கு உள்ளும் வெளியும் சுமந்திரனுக்கு எதிராக போர்க்கொடி தூக்கப்பட்டுள்ள நிலையில் அவரை கட்சியிலிருந்து வெளியேற்றுவதா இல்லையா என்ற தீர்’மானத்துக்கு இன்னும் அக்கூட்டின் தலைவர் சம்பந்தன் வராத நிலையில் சுமந்திரனும் தனது அடுத்த கட்ட நடவடிக்கை மற்றும் செயற்பாடுகள் தொடர்பில் இருவரை எதுவித கருத்துக்களையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|