கூட்டமைப்பின் பொய் வாக்குறுதிகளை நம்பி ஏமாற்றமடைந்துவிடோம் – வடமராட்சி கிழக்கு மக்கள் குற்றச்சாட்டு!

காணாமல் ஆக்கப்பட்டோரைக் கண்டுபிடித்துத் தருவோம் என்று வாக்குறுதியளித்து தேர்தலில் எமது வாக்குகளால் வெற்றிபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இன்று எம்மை ஏமாற்றி விட்டுள்ளனர் என கேவில் பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
வடமராட்சி கிழக்கு கேவில் பகுதியில் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்ற தேர்தல் பிரசார பரப்புரைக் கூட்டத்தில் கலந்துகொண்ட மக்களே இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
மேலும் அவர்கள் தெரிவிக்கையில் –
இறுதி யுத்தகாலப் பகுதியில் தமது உறவுகளைத் தாம் தொலைத்திருந்த நிலையில் இன்றும் அந்த உறவுகளைத் தேடிக் கொண்டிருப்பதாகவும் அந்த மக்கள் தெரிவித்தனர்.
இந்தநிலையில் காணாமல் போன தமது உறவுகளைக் கண்டுபிடித்துத் தருவோம் என்று கூறிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நாம் முன்வைத்த கோரிக்கைகள் தொடர்பில் இதுவரையில் எந்தவிதமான பதில்களையும் எமக்கு வழங்கவில்லை. இதனால் அவர்கள் மீதான நம்பிக்கையை நாம் முற்றாக இழந்துவிட்டோம். அதுமாத்திரமன்றி மீள் குடியேற்றத்திற்கு பின்னரான எமது தேவைப்பாடுகளைக் கூட அவர்கள் வழங்கிய உறுதிமொழிகளுக்கு அமைவாக எதனையும் செய்துதரவில்லை.
டக்ளஸ் தேவானந்தாவை தவிர வீட்டுத்திட்டம் மின்சாரம் வீதி உள்ளிட்ட தேவைகளை தனி ஒருவராக டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியின் பயனாகவே கிடைக்கப் பெற்றுள்ளது என்றும் இங்குள்ள முக்கிய பிரச்சினைகளில் ஒன்றான வன ஜீவராசிகளுக்கென முள்ளியான், கட்டைக்காடு ஆகிய பகுதிகளை தேசிய பூங்காவாக அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றதால் அதற்காக மக்களின் காணிகள் சூறையாடப்படும் நிலை உருவாகியுள்ளதாகவும் இதனால் தாம் பலத்ததொரு நெருக்கடியை எதிர்கொள்வதாகவும் அந்த மக்கள் சுட்டிக்காட்டினர்.
Related posts:
|
|