கூட்டமைப்பின் உறுப்பினருக்கு எதிராக வேலணை பிரதேச சபை உறுப்பினர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!
Monday, July 30th, 2018தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேலணை பிரதேச சபை உறுப்பினர் கருணாகரன் நாவலனை தலைமையாக கொண்டு இயங்கவதாக கூறப்படும் தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்று அடங்கலாக 4 தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு எதிராக வேலணைப் பிரதேச சபை உறுப்பினர்கள் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளனர்.
அண்மையில் வேலணை பிரதேச சபையினால் கொண்டுவரப்பட்ட குடிநீர் வழங்கலுக்கான கட்டுப்பாட்டை அடுத்து புங்குடுதீவு பகுதிக்கு குடிநீர் வழங்கப்படுவது தொடர்பில் உள்ள சர்சைகளை அடுத்து பிரதேச சபை உறுப்பினரான நாவலனை தலைமையாக கொண்ட அமைப்பு ஒன்று உள்ளிட்ட 4 அமைப்புகள் பிரதேச சபையின் விகிதாசார பட்டியல் உறுப்பினர்களை அவதூறுபடுத்தும் வகையில் பல்வேறு போலியான கருத்துக்களை முன்வைத்து துண்டுப்பிரசுரங்கள் வெளியிடப்பட்டும் செய்தியூடகங்களுக்கு செய்திகளை வழங்கியும் அவதூறு பிரசாரங்களை முன்னெடுத்திருந்தார்.
இதனையடுத்து கடந்த 26 ஆம் திகதிய மாதாந்த சபையின் அமர்வில் குறித்த விடயம் பெரும் சர்ச்சையாக உருவாகியிருந்த நிலையில் குறித்த அமைப்புகளுக்கு எதிராக விசாரணைகளை முன்னெடுத்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வேலணை பிரதேச சபையில் சபை உறுப்பினர்களால் வலியுறுத்தப்பட்டது.
இந்நிலையில் சபையின் விஷேட அமர்வு வேலணை பிரதேச சபையின் கேட்போர் கூடத்தில் தவிசாளர் நமசிவாயம் கருணாகரகுருமூர்த்தி தலைமையில் இன்றையதிம் (30 ) கூடியது.
இதன்போது அண்மையில் தனிப்பட்ட சுய இலாபத்துக்காக பொய்யான தகவலை வெளியிட்டு சபையின் விகிதாசார உறுபடபினர்களை அவதூறு செய்ததுடன் மக்களை திசைதிருப்பும் முயற்சியிலும் பொய்யான அவதூறான செய்திகள் மற்றும் துண்டுப் பிரசுரங்களை வெளியிட்தற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அதனை மேற்கொண்டதாக கூறப்படும் நாவலனை தலைமையாக கொண்டதாக கூறப்படும் தன்னார்வு தொண்டு நிறுவனம் உள்ளிட்ட 4 அமைப்புகளையும் விசாரணை செய்து சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக விசாரணைகள் நடத்தப்பட்டு உண்மை வெளிக்கொண்டுவரப்பட வேண்டும் என்பது தொடர்பில் பிரேரணை ஒன்றை சபையின் தவிசாளர் கருணாகரகுருமூர்த்தி முன்வைத்தார்.
குறித்த பிரேரணையை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினாரன திருமதி அனுஷியா முன்மொழிய ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் பிரகலாதன் வழிமொழிந்தார். இதனையடுத்து குறித்த விடயம் சபையில் விவாதிக்கப்பட்டு வாக்கெடுப்புக்கு விடப்பட்டது.
சபையின் மொத்த உறுப்பினர்கள் 20 பேரில் 19 உறுப்பினர்கள் குறித்த பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்கு பிரேரணை அறுதிப் பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது.
இதனையடுத்து சபையின் 19 உறுப்பினர்களும் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் குறித்த 4 அமைப்பகளுக்கம் எதிராக முறைப்பாட்டை பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|