கூட்டமைப்பினரிடம் பிரச்சினைகளுக்கான தீர்வினை எதிர்பார்க்க முடியாது – வடமராட்சி மக்கள் ஆதங்கம்
Friday, April 8th, 2016தேர்தல் வெற்றியை மட்டும் இலக்காகக் கொண்டு செயற்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தேர்தல் காலங்களில் வழங்கிய வாக்குறுதிகளை மறந்து செயற்படுகின்றமை எமக்கு மிகுந்த வேதனையளிக்கின்றது என வடமராட்சி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
வடமராட்சி மக்களுடன் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தாவிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தேர்தல் காலங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வழங்கும் வாக்குறுதிகளை நம்பிநாம் அவர்களுக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்கின்ற போதிலும் எமது கோரிக்கைகள் தேவைப்பாடுகள் தொடர்பில் அவர்கள் இன்று வரை பாராமுகமாக இருக்கின்றமை எமக்கு மிகுந்தவேதனையளிக்கின்றது.
நாம் அவலப்படும் துன்பப்படும் நேரங்களிலெல்லாம் அவர்கள் எம்மிடம் வருவதற்கோ எமது பிரச்சினைகள் தொடர்பில் தெரிந்துகொள்வதற்கோ தீர்வுகாண்பதற்கோ அவர்களுக்கு ஆற்றலோ அக்கறையோ இல்லாதுள்ளதை தற்போது அறிந்துகொள்ளக் கூடியதாகவுள்ளது.
குறிப்பாக தேர்தல் காலங்களில் நடைமுறைச் சாத்தியமாகாத பல வாக்குறுதிகளை வழங்கும் அதேவேளை உணர்ச்சிப் பேச்சுக்களாலும் உசுப்பேற்றல்களாலும் எமது வாக்குகளையும் அபகரிக்கின்றனர்.
இதனூடாக தேர்தல் வெற்றியைமட்டும் இலக்காகக் கொண்டு செயற்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடம் எமதுபிரச்சினைகள் தேவைப்பாடுகள் தொடர்பில் உரிய தீர்வினை திர்பார்க்க முடியாது என்பதுவே உண்மையான விடயமாகுமென்றும் சுட்டிக்காட்டினர்.
எமது கடற்றொழிலாளர்கள் இந்திய மீனவர்களினால் அவலங்களையும் இடர்பாடுகளையும் சந்திக்கும்போதெல்லாம் கூட்டமைப்பினர் பாராமுகமாக இருக்கின்றமைக்கான காரணம்தான் என்ன? என்றும் மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
Related posts:
|
|