கூட்டத்தில் கலந்துகொள்ளமுடியாதென திறைசேரி செயலாளர் அறிவிப்பு!

இன்று இடம்பெறும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் கூட்டத்தில் கலந்துகொள்ள முடியாது என திறைசேரியின் செயலாளர் மகிந்த சிறிவர்தன ஆணைக்குழுவுக்கு எழுத்துமூலம் அறிவித்துள்ளார்.
உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில், தேர்தல்கள் ஆணைக்குழு இன்றையதினம் கூடி ஆராய்கிறது.
இதன்போது, உள்ளூராட்சிமன்றத் தேர்தல் நடத்தப்படும் தினம், தேர்தலுக்கான நிதி மற்றும் வாக்குச்சீட்டு அச்சிடுதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளது.
குறித்த கலந்துரையாடலில் பங்கேற்குமாறு திறைசேரியின் செயலாளர், அரச அச்சகர் மற்றும் காவல்துறை மா அதிபர் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இதற்கிடையில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பொன்றும் இடம்பெறவுள்ளது
முன்னதாக தேர்தல் நடத்தப்படும் தினம் தொடர்பில் தீர்மானிப்பதற்காக தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பு கடந்த 3 ஆம் திகதி இடம்பெற்றது. எனினும் அன்றையதினம் இறுதி தீர்மானம் எதுவும் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை.
இதேவேளை, எதிர்வரும் 19 ஆம் திகதிக்கு முன்னர், உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு எதிர்க்கட்சிகள் இணைந்து கூட்டாக கடிதம் அனுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|