குழியில் விழுந்து உயிரிழந்த குழந்தை!

Sunday, December 24th, 2017

கிளிநொச்சி அக்கராயன்குளம் கண்ணகிபுரம் பகுதியில் ஒன்றரை வயது ஆண் குழந்தை ஒன்று நீர் நிரம்பிய குழியில் விழுந்து உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

குறித்த பகுதியை சேர்ந்த சத்தியசீலன் ஜெயந்தன் என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்ததாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

வரட்சி காரணமாக குறித்த வீட்டார் குழாய் கிணற்றில் பொருத்தப்பட்ட இயந்திரத்தை தாழ் இறக்கி பயன்படுத்துவதற்காக வெட்டப்பட்ட குழியிலேயே குறித்த குழந்தை விழுந்துள்ளது.

குறித்த குழந்தை விளையாடிக் கொண்டிருந்தபோது குழந்தையின் தாயார் முற்றத்தை சுத்தம் கொண்டிருந்துள்ள நிலையில் விளையாடிக்கொண்டிருந்த குழந்தையை காணவில்லை என தெரிவித்து அயலவர்களின் உதவியுடன் தேடிய போது குழந்தை குறித்த குழியில் விழுந்து கிடப்பதை அவதானித்து மீட்டுள்ளனர்.

இதனையடுத்து குழந்தை கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள போதும் குறித்த குழந்தை உயிரிழநதுள்ளது. சம்பவம் தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts: