குழாய் மூலம் வழங்கப்படும் குடிநீர் பாவனைக்கு உகந்ததாக இல்லை – பிரதேச மக்கள் குற்றச்சாட்டு!

கிளிநொச்சி கல்லாறுப் பிரதேசத்தில் குழாய் மூலம் விநியோகிக்கப்படுகின்ற குடிநீர் மக்கள் பயன்பாட்டிற்கு ஏற்றதாக இல்லையென பிரதேச மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கண்டாவளைப் பிரதேச செயலர் பிரிவிலுள்ள கல்லாறுக் கிராமத்தில் சுமார் 250 ற்கும் மேற்பட்ட குடும்பங்களின் குடிநீர்ப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு கரைச்சிப் பிரதேச சபையினால் பிரமந்தனாறுக் கிராமத்திலிருந்து குடிநீர் விநியோகத் திட்டம் கடந்த ஆண்டு ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது விநியோகிக்கப்படுகின்ற குடிநீர் கரிய நிறத்தில் காணப்படுவதாகவும் இந்நீரை குடிநீருக்குப் பயன்படுத்தக்கூடியதாக இல்லையென கவலை வெளியிட்டுள்ளனர்.
Related posts:
கொரோனா வைரஸ் தொற்றாளர் எண்ணிக்கை 94 ஆக உயர்வு!
இலங்கை அரச தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் சங்கம் வடக்கில் உதயம்!
உத்தேச மின்சாரக் கட்டண உயர்வை ஏற்றுக்கொள்ள முடியாது - இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மீண்டும் ...
|
|