குழந்தை திருமணத்திற்கு முற்றுப்புள்ளி – புதிய நீதி அமைச்சர் அலி சப்ரி உறுதி!

இலங்கையில் குழந்தை திருமண பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக நீதி அமைச்சர் அலி சப்ரி உறுதியளித்துள்ளார்.
அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களுக்கு சென்று ஆசி பெற்ற போது இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
அரசியலமைப்பின் படி அனைத்து இலங்கையர்களுக்கும் பௌத்தத்தை வளர்ப்பதற்கான பொறுப்பும் கடமையும் அனைத்து உள்ளது என்று நீதி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் இனம், மதங்களைப் பொருட்படுத்தாமல் நாங்கள் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று அவர் மேலும் கூறினார்.
குழந்தை திருமணங்கள் தொடர்பில் முஸ்லிம் பெண்களை பிரதிநிதித்துவப்படுத்துவோரை சந்தித்ததாக நீதி அமைச்சர் கூறினார்.
இதேவேளை அனைத்து சமூகங்களிலும் தீவிரவாத கருத்துக்களைக் கொண்டவர்கள் இருக்கிறார்கள் என்று குறிப்பிட்டார்.
“அத்தகைய நபர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களை மறுவாழ்வு செய்வதற்கான வழிகளை நாங்கள் தேடுகிறோம்,” என்று அவர் கூறினார்.
எவ்வாறாயினும், சிறந்த இலங்கையர்களாக ஒன்றாக வாழ வேண்டும் என்று பெரும்பான்மையான மக்கள் விரும்புவதாகவும் நீதி அமைச்சர் மேலும் கூறினார்.
Related posts:
|
|