குழந்தைகளை நேசிக்கும் ஆசிரியர்கள்தான் இலங்கை வரலாற்றில் எப்போதும் இருந்திருக்கிறார்கள் – அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நம்பிக்கை!

குழந்தைகளை நேசிக்கும் ஆசிரியர்கள்தான் இலங்கை வரலாற்றில் எப்போதும் இருந்திருக்கிறார்கள் என தெரிவித்துள்ள அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பாடசாலைகள் ஆரம்பிக்கும் நாளன்று ஆசிரியர்கள் அனைவரும் சமுகமளிப்பர் என நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
21 ஆம் திகதி பாடசாலைகள் திறப்பது தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில் –
ஆசிரியர்கள் 21 ஆம் திகதி பாடசாலைகளுக்கு வருவார்கள் என்று நான் நம்புகிறேன். குழந்தைகளை நேசிக்கும் ஆசிரியர்கள் தான் இலங்கை வரலாற்றில் எப்போதும் இருந்திருக்கிறார்கள்.
ஜேவிபி பாடசாலைகளை மூட அழைப்பு விடுத்தபோது இந்த ஆசிரியர்கள் தங்கள் உயிரை பணயம் வைத்த வரலாறு உள்ளது.
ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களிடம் பாடசாலைகளை மூடச் சொன்னார்கள். அதிபர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். வெட்டப்பட்டார்கள் .
எனவே, ஜேவிபி மற்றும் பிற தொழிற்சங்கங்கள் என்ன கூறினாலும், பெரும்பாலான ஆசிரியர்கள் 21 ஆம் திகதி பாடசாலைக்கு வருவார்கள் என்று நான் நம்புகிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..
00
Related posts:
|
|