குழந்தைகளுக்கு எச்.ஐ.வி தொற்று ஏற்படாமலிருப்பதற்கான சிகிச்சை!

Monday, May 13th, 2019

2011 ஆம் ஆண்டு முதல் எச்.ஐ.வி தொற்றுக்கு உள்ளான கர்பிணித் தாய்மார்களுக்கு பிறந்த குழந்தைகளுக்கு குறித்த தொற்று ஏற்படாமலிருப்பதற்கான சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளதாக தேசிய எச்.ஐ.வி எய்ட்ஸ் ஒழிப்பு வேலைத்திட்டம் தெரிவித்துள்ளது.

 அந்த திட்டத்தின் ஆலோசகரான மருத்துவர் லிலானி ராஜபக்ஷ இதனைத் தெரிவித்துள்ளார்.

தாய்க்கு எச்.ஐ.வி. தொற்று ஏற்பட்டுள்ளது என்பதை கர்ப்ப காலத்தின் முற்பகுதியில் அறிந்துகொள்வதன் ஊடாக சிகிச்சையை வழங்க முடியும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

உடனடியாக சிகிச்சை முறைகளை ஆரம்பிக்கும் பட்சத்தில் மகப்பேற்று காலத்தின் போது குறித்த தாயின் உடலில் உள்ள வைரஸ் தாக்கம் குறைவடையும்.

இதனூடாக தாயிலிருந்து குழந்தைக்கு ஏற்படவிருக்கும் தாக்கம் அதிகளவில் குறைவடையும் என மருத்துவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் தங்களின் சேவையைப் பெற்றுக்கொண்ட எச்.ஐ.வி தொற்றுடைய தாய்மார்களின் குழந்தைகள் அந்தத் தொற்று அல்லாத குழந்தைகளாக உள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts: