குளிர் காலநிலை குறித்து குடும்ப சுகாதார பணியகம் விசேட கோரிக்கை!

Thursday, January 12th, 2017

நாட்டில் தற்போது நிலவும் கடுமையான குளிர் காலநிலை காரணமாக, பிறந்த சிசுக்கள், கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் வயோதிபர்கள் ஆகியோரின் உடல்நலம் பாதிக்கும் என்று, குடும்ப சுகாதார பணியகம் அறிவித்துள்ளது.

இந்தக் குளிர்காலத்திலிருந்து தங்களது சுகாதாரத்தை பாதுகாத்துக் கொள்வதற்கு, எந்நேரமும் உடலைச் சூடாக வைத்துக் கொள்வதற்கான ஆடையை அணியுமாறும், சூடான உணவுகளை அருந்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, சிறுவர்கள் மற்றும் வயோதிபர்களுக்கு, மூச்சுத்திணறல் ஏற்படுவது போன்று அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக வைத்திய உதவியை நாடுமாறும், பொதுமக்களுக்கு குடும்ப சுகாதார பணியகம் மேலும் கோரிக்கை விடுத்துள்ளது.

family-health-burea

Related posts: