குளிருடன் கூடிய காலநிலை 18ஆம் திகதிக்குப் பின் குறையும்!

இரவு மற்றும் அதிகாலை வேளைகளில் நாட்டில் நிலவும் கடும் குளிருடன் கூடிய காலநிலை எதிர்வரும் 18ஆம் திகதிக்கு பின்னர் குறைவடையலாம் என எதிர்பார்ப்பதாக வானிலை அவதான நிலைய பணிப்பாளர் கே.எச் பிரேமலால் தெரிவித்துள்ளார்.
நேற்று வெள்ளிக்கிழமை நடந்த ஊடகச் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தற்போது நாட்டில் கடும் குளிருடன் கூடிய காலநிலை நிலவுகிறது. இதன்படி தற்போது பல பிரதேசங்களில் வெப்பநிலை கடந்த காலங்களை விட 4 மற்றும் 5 பாகை செல்சியஸால் குறைவடைந்துள்ளது. இந்நிலைமைக்கு காரணம், வானில் முகில்கள் இல்லாமைய ஆகும். வழமையாக டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் குளிரான காலநிலை நிலவினாலும், இம்முறை காணப்படும் கடும் வரட்சியான காலநிலையால் வானில் முகில்கள் கூட்டங்கள் இல்லாது உள்ளது. இதனால் குளிர்நிலமை ஏற்படுகின்றது. எவ்வாறாயினும் ஜனவரி 17,18 ஆம் திகதிகளுக்கு பின்னர் வானில் முகில் கூட்டங்கள் அதிகரிக்காலம். இதன்போது குளிர்நிலமை குறைவடையும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|