குளங்கள் வான் பாய்வதனால் கிளிநொச்சியில் பல பிரதேசங்களின் போக்குவரத்து பாதிப்பு!

Sunday, January 17th, 2021

கிளிநொச்சி- கரியாலை நாகபடுவான் குளம் மற்றும் ஜெயபுரம், பல்லவராயன் கட்டு குளம் ஆகியன தொடர்ந்து வான் பாய்வதனால் வேரவில் கிராஞ்சி வலைப்பாடு உள்ளிட்ட கிராமங்களுக்கான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக பெய்த கன மழையினால் குளங்கள் நிரம்பி வெளியேறும் அதிகளவான வெள்ளநீர், வேரவில் கிராஞ்சி வீதியிலேயே காணப்படுகின்றது.

மேலும் இரண்டு இடங்களில் நான்கு அடிக்கு மேல் வெள்ள நீர் பாய்ந்த வண்ணம் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை கடந்த ஆறு நாட்களுக்கு மேலாக இவ்வீதியூடான பேருந்து போக்குவரத்துச் சேவைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக இந்தப் பிரதேசத்தில் உள்ள மக்களது போக்குவரத்து தேவைகளை கருதி, பூநகரி பிரதேச சபையினால் உழவு இயந்திரத்தில் பயணிகளை ஏற்றி, இறக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts:


சுயநலன்களுக்காக மக்களை ஏமாற்றுவதற்கு நாம் தயாரில்லை - யாழ் .மாநகர சபையின் பாதீட்டை தோற்கடிக்க இதுவ...
இஸ்ரேலில் வேலைக்குச் செல்லும் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு - அமைச்சர் மனுஷ நாணயக்கார தகவல்!
கடனை செலுத்தாத கடனாளிகளின் சொத்துக்களை வங்கிகளால் பறிமுதல் செய்வதை டிசம்பர் 15 ஆம் திகதி வரை இடைநிறு...