குற்றவாளிகள் தப்பிச் செல்வதை தடுப்பதற்கு இலங்கையை சுற்றி தீவிர பாதுகாப்பு வலயம் – பாதுகாப்பு அமைச்சு அறிவிப்பு!

Saturday, September 26th, 2020

நாட்டிலிருந்து குற்றவாளிகள் தப்பிச் செல்வதை தடுப்பதற்கும் சட்டவிரோதமாக நாட்டிற்கு நுழைவதனை தடுப்பதற்கும், தடை செய்யப்பட்ட பொருட்களை நாட்டிற்குள் கொண்டு வருவதனை தடுப்பதற்கும் தீவிர பாதுகாப்பு வலயம் ஒன்றை செயற்படுத்துவதற்கு பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

அதற்கமைய இலங்கையைச் சுற்றி தீவிர பாதுகாப்பு வலயங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்காக முப்படையினர், விசேட அதிரடிப்படையினர், பொலிஸார் மற்றும் வடக்கு மீனவ பிரஜைகளின் ஆதரவும் இதற்காக கிடைத்துள்ளது என பாதுகாப்ப அமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் அவசியமான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், தேசிய பாதுகாப்பிற்கான முடிந்த அளவு செயற்படுவதாகவும் இராணுவ ஊடக பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

சட்டவிரோத குடியேறிகள் நாட்டிற்குள் நுழைவதனை தடுப்பதற்காவே வடக்கு மீன்பிடி பிரஜைகளின் பாதுகாப்பு குழுவின் ஆதரவு பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் பொலிஸாரினால் நாட்டினுள் சிவில் சட்டம் செயற்படுத்தும் போது நாட்டின் கடன் வழியான தப்பி செல்ல முயற்சிக்கும் நபர்கள் தொடர்பில் தீவிர அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக கடற்படை ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: