குற்றவாளிகள் ஆஜராகாத வழக்குகளுக்கு கிராமசேவகர்கள் ஆஜராக வேண்டும்!

Sunday, October 16th, 2016

குற்றவாளிகள் ஆஜராகாத வழக்குகள் மற்றும் பாராமரிப்பு வழங்குகளில் கிராம சேவகர்கள் ஆஜராகி சாட்சியமளிக்க வேண்டும் என மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் மா.கணேசராஜா உத்தரவிட்டுள்ளார்.

கிராம சேவகர்கள் தமது கிராம எல்லைக்குட்பட்ட எதிரிகள், பிரதிவாதிகளின் வதிவிட விபரங்களை வெறும் அறிக்கை மூலம் கடந்த காலங்களில் அனுப்பிவந்துள்ளனர். எதிர்வரும் காலங்களில் கிராம சேவையாளர்கள் வதிவிட அறிக்கைகளை வெறுமனே அறிக்கை மூலம் நீதிமன்றுக்கு அனுப்பாது, நீதிமன்றில் நேரடியாக ஆஜராகி சாட்சியமளிக்க வேண்டும் என  மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பிரதேச செயலாளர்களுக்கும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் மா.கணேசராஜா உத்தரவிட்டுள்ளார்.

batti corts

Related posts: