குற்றம் செய்திருந்தால் ஒப்புக்கொள்ள வேண்டும் – பொலிஸ்மா அதிபர்!

Thursday, August 24th, 2017

தனிப்பட்ட நிகழ்ச்சித் திட்டங்களுக்கு அமைவாக சிலர் ஊடகங்களைப் பயன்படுத்தி தனக்கெதிராக வதந்திகளைப் பரப்பிவருவதாக பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர குற்றம் சுமத்தியுள்ளார்.

பொலிஸ் தலைமையகத்தில் ஊழியர் ஒருவரை பொலிஸ்மா அதிபர் தாக்கச்சென்ற வகையில் அண்மையில் காணொளி ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையிலேயே பொலிஸ்மா அதிபர் இப்படியாக குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்தார்.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் நேற்றைய தினம் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். தங்களது கைகளில் குற்றம் செய்யப்பட்டிருந்தால் அது பிழை என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும் என்பதே சாலச்சிறந்த நடத்தை என்றும் பொலிஸ்மா அதிபர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும் சமூக ஊடகங்களில் வெளியாகிய பொலிஸ்மா அதிபரின் காணொளி தொடர்பில் நேரடியாக அவர் இதுவரை எதுவும் கருத்து வெளியிட்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Related posts: