குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரியின் இடமாற்றம் இரத்து!

Friday, March 15th, 2019

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் நெவில் சில்வாவிற்கு வழங்கப்பட்ட இடமாற்றம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

பிரதான பொலிஸ் பரிசோதகரினால் முன்வைக்கப்பட்ட மேன்முறையீடு ஆராயப்பட்ட போதே குறித்த இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

மேலும், அது தொடர்பில் சம்பந்தப்பட்ட பிரிவிற்கு எழுத்து மூலம் அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியின்றி கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரியாக செயற்பட்ட குறித்த பொலிஸ் பரிசோதகர் அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டு பொலிஸ் தலைமையகத்திற்கு இடமாற்றப்பட்டதாக ஆணைக்குழுவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Related posts: