குற்றச் செயல்களை ஒரே ஆண்டில் தடுத்து நிறுத்துவேன் – கடற்படை தளபதி !
Saturday, August 26th, 2017கடற்பரப்பில் இடம்பெற்று வரும் குற்றச் செயல்கள் மற்றும் கடத்தல் சம்பவங்களை ஒரு வருடத்துக்குள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவேன் என கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையா தெரிவித்துள்ளார்.
இலங்கை கடற்படையின் 22ஆவது தளபதியாக பொறுப்பேற்றுள்ள வைஸ் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையா அஸ்கிரிய, மல்வத்து பீடாதிபதிகளைச் சந்தித்து ஆசி பெற்றுள்ளார்.
இதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், “கடலோரப் பாதுகாப்புக்காக பல கப்பல்களை இந்தியாவிடமிருந்து கொள்வனவு செய்யவுள்ளோம்.இக்கப்பல்களைக் கொள்வனவு செய்வதன் நோக்கம் கடத்தல்களைக் கட்டுப்படுத்துவதற்கேயாகும்.
இன்னும் ஒரு வருடத்தை எமக்குத் தாருங்கள். கடல் வழியாக இடம்பெறும் அனைத்து சட்டவிரோத செயல்களையும் கட்டுப்படுத்த முடியும்.இதேவேளை, இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடிக்கும் இந்திய மீனவர்களுக்கு அவர்களது எல்லை தெரியாததாலேயே எல்லைமீறி மீன் பிடிக்கின்றார்கள்.
எனவே, அவர்களது கடல் எல்லையைச் சரியாக காண்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையா மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|