குற்றச்செயல்கள்  தொடர்பான தகவல்களைப் பெற்றுக் கொள்ள விசேட படை!

Monday, August 14th, 2017

போதைப்பொருள் மற்றும் திட்டமிட்ட குற்றச்செயல்கள் குறித்து பொதுமக்களின் தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கு விசேட நடவடிக்கைப் பிரிவொன்று பொலிஸ் அதிரடிப்படை தலைமையகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தப் பிரிவு 24 மணிநேரமும் செயற்படும். 0112-58-05-18, 0112-05-85-52 அல்லது 0112-08-10-40 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக இது தொடர்பான தகவல்களை வழங்க முடியும்.

இதற்கு மேலதிகமாக 0112-08-10-44, 0112-58-84-99 என்ற தொலைநகல் மூலமாகவும் தகவல்களை வழங்க முடியும் என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

Related posts: