குற்றச்செயல்கள் தொடர்பில் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கம்!

Monday, August 13th, 2018

யாழ்ப்பாணத்தில் குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றவர்கள் தொடர்பில் இதுவரை 12க்கும் அதிகமான தகவல் கிடைத்துள்ளதாக வட மாகாண சிரேஷ்ட பிரதி காவற்துறைமா அதிபர் தெரிவித்துள்ளார்.

குற்றச்செயல்கள் தொடர்பில் அறிவிக்க, 076 609 3030 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இது குறித்து யாழ்ப்பாணம், கோப்பாய் மற்றும் சுன்னாகம் பகுதிகளில் துண்டுப் பிரசுரங்கள் ஊடாக பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டது.

இந்தநிலையில், கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கு அமைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வட மாகாண சிரேஷ்ட பிரதி காவற்துறைமா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

இதேநேரம், தமக்கு தகவல் வழங்குபவர்களின் பாதுகாப்பு தொடர்பில் தாம் முழுமையான பொறுப்பை ஏற்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts: