குற்றச்செயல்களை தடுக்க புதிய தொழில்நுட்பங்கள் !

Tuesday, October 4th, 2016

நாட்டில் அதிகரித்து வரும் குற்றச்செயல்களை குறைப்பதற்கு புதிய தொழல்நுட்பங்களை கையாள அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்துக்கள் அல்லது குற்றச்செயல்களுக்கு முகங்கொடுப்பவர்கள் தமது கைத்தொலைபேசி ஊடாக செய்யும் முறைபாடுகள் தொடர்பான அனைத்து தரவுகளையும் பெறும் வகையில் புதிய தொழில்நுட்ப முறையினை மேற்கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதன் மூலம் பொலிஸ் சேவையை பயனுள்ளதாகவும், மக்களுக்கு நெருங்கிய சேவையினை வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கமைய குறித்த புதிய தொழில்நுட்பம் தொடர்பில் ஆராய பிரதமர் அலுவலக சபையின் பிரதானி மற்றும் அமைச்சர் சாகல ரத்னாயக்க ஆகியோர் இன்று நியூசிலாந்தின் வெளிங்டன் நகரில் அமைந்துள்ள அந்நாட்டின் பொலிஸ் தலைமையகத்திற்கு விஜயம் செய்துள்ளனர்.

இங்கு புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதன் ஊடாக குற்றங்கள் மற்றும் விபத்துக்களை குறைப்பது தொடர்பான விளக்கங்கள் அந்நாட்டின் பொலிஸ் தலைமையக அதிகாரிகளால் வழங்கப்பட்டுள்ளது. புதிய முறை மூலம் தமது முறைபாடுகளை தெரிவிக்க எந்தவொரு நபரும் பொலிஸ் நிலையங்களுக்கு வருவதற்கான அவசியம் இல்லை என்றும் அந்நாட்டின் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

625.0.560.320.160.600.053.800.668.160.90